திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 600 mm CI பிரதான குடிநீர் உந்து குழாயில் (கண்டோன்மென்ட் முத்தரையர் சிலை அருகில்) 5 மீட்டர் அளவில் 400 mm பிரதான குடிநீர் உந்து குழாய் சிறிய அளவில் உள்ளது. எனவே, அதற்கு பதிலாக 600 mm CI குடிநீர் உந்து குழாய் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இன்று 08.07.2026 இப்பணி

மேற்கொள்ளப்படவுள்ளதால், மேற்கண்ட நீரேற்று நிலையத்திலிருந்து தில்லை நகர், நகர், கண்டோன்மென்ட புதியது, காஜாபேட்டை பழையது, காஜாபேட்டை புதியது, அண்ணா கண்டோன்மென்ட பழையது, ஜங்ஷன் பழையது, ஜங்ஷன் பொன்நகர், கருமண்டபம், தெற்கு ராமலிங்க நகர், UKT பழையது, UKT புதியது, கல்லாங்காடு, மிளகுபாறை மற்றும் சொசைட்டி காலணி ஆகிய 15 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநயோகம் 09.07.2026 அன்று ஒருநாள் இருக்காது.

10.07.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments