செ.செ.எண்.29/2026 நாள்: 13.07.2026
பொருள்: மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் – தனியார் துறை – வேலைவாய்ப்பு முகாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வேலையில்லாதவர்களை தனியார் துறைகளில் வேலைக்கு அமர்த்தும் நோக்கத்துடன், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தால் மிகப்பெரிய தனியார் துறை வேலைவாய்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமில் உற்பத்தி துறை, சேவை துறை, விற்பனை துறை போன்ற பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியுடையவர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், இந்த மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு மாணவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு கல்வி தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதிற்குள்ளான வேலையில்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவர குறிப்பு (Bio-data), அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு, வேலையில்லாதவர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலையில்லாதவர்கள் 17.07.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருச்சி, பெர்னாண்டஸ் சாலை, கிழக்கு போர்ட் மேல்நிலை அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி / கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நாள்: 13.07.2026
இடம்: திருச்சிராப்பள்ளி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments