திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம்
திருச்சி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் வெளியே வந்து வளைவில் திரும்பிச் செல்லும் இடத்தில், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்து ஏறுவது வழக்கம்.

அந்த இடத்தின் அருகே உள்ள நிழற்குடையை ஒட்டியபடி ஆட்டோக்கள் நிறுத்துவதற்காக கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நிழற்குடைக்கு பின்புறம் உள்ள முட்புதரில் யாரோ பற்றவைத்த நெருப்பால் தீ பரவத் தொடங்கியது. கடும் வெயிலால் உலர்ந்திருந்த புதர்களில் தீ வேகமாக பரவி, அதிகளவு புகைமூட்டம் எழுந்தது. பின்னர் தீ அருகிலிருந்த கீற்று கொட்டகையிலும் பரவி, சிறிது நேரத்தில் அது முழுவதும் தீக்கிரையானது.

இதைக் கண்ட பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், போக்குவரத்தில் சற்று நேரம் பாதிப்பும் ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments