Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 25.10.24-ந்தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ்நகர் ஹரிணிநகரில் வசித்து வந்த சம்ஷாத் பேகம் 56/26 என்பவரை அவரது மருமகளான ஆயிஷாபீவி 25/26 க.பெ.முகமது சிராசுதீன் என்பவர் மாமியார் சம்ஷாத் பேகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது வீட்டில் மாமியார் சம்ஷாத் பேகத்தை மார்பு, வாய் மற்றும் தோள்பட்டையில் கத்தியால் குத்தி கொலை செய்தும், இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த பெண் மற்றும்

ஆயிஷாபீவியின் 9 மாத பெண் குழந்தை ஆகியோரை கத்தியால் குத்தியதாக பெறப்பட்ட புகாரில் வழக்குபதிவு செய்தும், வழக்கின் எதிரியான ஆயிஷாபீவி என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 20.12.2024-ந்தேதி வழக்கின் எதிரியான ஆயிஷாபீவி என்பவர் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இன்று 30.07.2026-ந்தேதி மேற்படி வழக்கில் மாண்பமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி அவர்களால் எதிரி ஆயிஷாபீவிக்கு கொலை செய்த குற்றத்திற்கு BNS பிரிவு 103(1)-ன்படி ஆயுள்தண்டனையும், ரூ.6,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.


இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்கள்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *