திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று

வண்டல் மண் அள்ளுவதற்கு எட்வர்ட் என்பவரிடம் நீர்வளத்துறை பணி ஆய்வாளர் லோகநாதன் என்பவர் ரூ.4000/- லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத எட்வர்ட் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது புகார்தாரர் எட்வர்டிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.4000/-த்தை புதிய

கட்டளை மேட்டுவாய்க்கால் பிரிவு-1 பணி ஆய்வாளர் லோகநாதன் கேட்டு பெற்று வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார். திருச்சி மாவட்ட நீர்வளத்துறை, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிவு-1 உதவி பொறியாளர் அலுவலகத்தில் திருச்சி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments