Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை சந்திக்கும் நோக்கம் – ரவூப் ஹக்கீம் பேட்டி

இலங்கை வரவிருக்கிற இந்திய வெளியுறவு செயலாளரையும் சந்திப்பதற்கு எங்களுக்கு மத்தியில் ஒரு உடன்பாடு நாங்கள் கண்டிருக்கிறோம்.தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கான ஒரு நோக்கம் இருக்கிறது விரைவில் நடக்கும் திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி., பேட்டி இலங்கை வரவிருக்கிற இந்திய வெளியுறவு செயலாளரையும் சந்திப்பதற்கு எங்களுக்கு மத்தியில் ஒரு உடன்பாடு நாங்கள் கண்டிருக்கிறோம். அதேபோல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கான ஒரு நோக்கம் இருக்கிறது விரைவில் நடக்கும் என்று திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து 31.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சார்பில் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது வரவேற்றார்.பின்னர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுடைய ஒன்றியமாக நாங்கள் செயல்படுவதற்கு அண்மையில் முடிவு எடுத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் வியாழக்கிழமை இரவு கலந்துரையாடல் நடைபெற்றது.திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாங்கள் கூட்டாக சந்திப்பது என்று தீர்மானித்திருக்கிறோம். அந்த சந்திப்பில் எங்கள் சமூகங்கள் சார்ந்த முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி ஜனாதிபதியோடு கலந்துரையாடுவது என்றும், அன்றைய தினமே பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திப்பதற்கான ஒரு முயற்சியையும் செய்வதாக தீர்மானித்திருக்கிறோம்.

இப்படி படிப்படியாக நாங்கள் கூட்டாக சந்திப்புகளை நடத்துவது என்று தீர்மானம் இருக்கிறது. மிக விரைவில் அடுத்த ஒரு நாட்களுக்குள் இலங்கை வரவிருக்கிற இந்தியாவின் வெளியுறவு செயலாளரையும் சந்திப்பதற்கு எங்களுக்கு மத்தியில் ஒரு உடன்பாடு நாங்கள் கண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உட்பட அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்கான ஒரு நோக்கம் இருக்கிறது. அதையும் மிக விரைவில் சாத்தியப்படுத்தலாம் என்று எதிர்பார்த்திருக்கிறோம்.பிராந்தியங்களுக்கு இடையில், மாநிலங்களுக்கு இடையில் நதிகளின் நீர் பங்குபீடு சம்பந்தமான விவகாரத்தில் அரசியலமைப்பில் இருக்கிற ஏற்பாடுகளுக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றமாக மாநிலங்கள் செயல்படுகின்ற போது இது அந்த நதிகளா பங்கீடு படிக்கையில் கீழ்ப்புறமாக இருக்கிற மாநிலங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பது பல மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனை.

இவ்வாறான பிரச்சனை கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் மீண்டும் உருவாகி இருப்பது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதே நேரம் இதற்கென்று நீதிமன்ற தீர்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதற்கு அமைவாக அந்தந்த மாநில அரசுகள் நடந்து கொள்வது சம்பந்தமாக நாங்கள் இன்னும் வேறு அரசியல் நடவடிக்கைகளைப் பற்றியோ அல்லது இன்னுமொரு நாட்டிலே நடக்கிற அரசியல் பிரச்சனைகளை மிக கவனமாக சீர்தூக்கிப் பார்த்து அதிலே எங்களுடைய கருத்துக்களை சொல்வது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே இதுவரை அதைப் பற்றி எங்களுக்குள் நாங்கள் இன்னும் கலந்துரையாடல்களை நடத்தவில்லை.கேள்வி: தமிழக மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படாத விஷயமாக வியாழக்கிழமை கூட யாழ்ப்பாணத்தில் வந்து இலங்கை மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

பதில் : இது நீண்டகாலப் பிரச்சனையாக இருக்கிறது. நான் அடிக்கடி இந்தியா வருகின்ற போதெல்லாம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது. இதை இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கிற ராஜதந்திர ரீதியான ஒரு பிரச்சனை மாத்திரம் அல்ல, ரெண்டு நாட்டின் மீனவ சமூகங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒரு வாழ்வாதாரப் பிரச்சனை.எனவே இதை வெறும் சட்டரீதியாக மட்டுமல்லாமல் நாங்கள் ஒரு வாழ்வாதாரப் பிரச்சனை என்ற அடிப்படையில் அதை மனிதாபிமான நோக்கில் அணுகி ஒரு சுமுகமான உடன்பாட்டை இரு தரப்பும் காண வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழ் நாட்டு மாநில அரசும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை அரசின் மீனவ துறை அமைச்சரோடும் கதைத்து, எங்களுடைய வெளியுறவு அமைச்சும் அதில் சம்பந்தப்பட்டு ஒரு நிரந்தரத் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எங்களைப் பொறுத்தமட்டிலே இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் நிறைய அவர்களுடைய மானிய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே வாழ்கிற இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு நிறைய உதவிகள் குறிப்பாக வீட்டுத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் செய்கின்ற உதவிகளைப் போல ஏனைய பிரதேசங்களிலும் இருக்கிற தமிழ் பேசும் மக்களுக்கு இன்றிருக்கிற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அரசின் அனுசரணை இருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம். அதேநேரம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இந்த அரசுகள் தடுத்துச் செய்கிறது. அது சம்பந்தமாகவும் அவரோடு கலந்துரையாடுவது என்று நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கிற யுத்தச் சூழல் கச்சா எண்ணெய்க்கு மிக உயரிய உலக சந்தையில் விலை உயர்வுக்கு இருக்கிற காரணத்தினால் எமது நாட்டின் பொருளாதாரத்திலும் அதேபோன்ற விவகாரங்கள், அதேநேரம் கப்பல் போக்குவரத்து சம்பந்தமான ஏற்றுமதி பண்டங்களின் விலை அதிகரிப்பு, இறக்குமதி பண்டங்களுக்கான விலை அதிகரிப்பு போன்ற விஷயங்கள் எங்களுடைய ஏற்றுமதி சந்தையையும் இறக்குமதி சந்தையையும் மிக மோசமாக பாதிக்கிற நிலைமை தோன்றியிருக்கிறது. இது ஏற்கனவே இருக்கிற எங்களுடைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாங்கள் அதை மீண்டு வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட எதிர்பாராத ஒரு பிரச்சனை எங்களுடைய பொருளாதாரத்திலும் பாரிய தாக்கம் செலுத்துகிறது.

கேள்வி : திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வந்து இலங்கை தமிழர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் உங்களுடைய விடுதலையை கோரி அடித்து வைத்திருக்கிறார்கள். அவங்க தொடர் போராட்டம் என்னவென்றால் எங்களுடைய இலங்கைக்கு அனுப்புங்கள் எங்களுடைய வழக்குகளை முடித்து வைத்துவிட்டு இலங்கைக்கு அனுப்புங்கள் என்று சொல்லிட்டு இருக்காங்க. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அது குறித்து பேச இருக்கிறீர்களா?

பதில் : இது சம்பந்தமாக நாங்கள் எங்களுக்குள் இதுவரை தீவிரமாக இதைப் பேசவில்லை. ஆனால் இப்படியான பிரச்சனை ஒன்று இருக்குமாக இருந்தால், அதைப் பற்றிய மகஜர்கள் எங்களுக்கு அனுப்பப்படுமாக இருந்தால் அதை நாங்கள் உள்ளூரில் அவ்வாறு அழுத்தங்கள் கொடுக்கலாம். அதேநேரம் ராஜதந்திர ரீதியாக இந்திய அரசோடு அது ஒரு சட்டரீதியான பிரச்சனைகளில் இன்னுமொரு நாட்டின் அரசியல் கட்சிகள் தலையீடு செய்வது அவ்வளவு சிறப்பாக இருக்காது. இருந்தாலும் இயன்றவரை ராஜதந்திர ரீதியாக எங்களுடைய வெளியுறவு அமைச்சோடும் தொடர்பு கொண்டு அது சம்பந்தமாக எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்யத் துணிப்போம்.

 

கேள்வி: தமிழர்களின் நிலங்கள் அங்கு அபகரிக்கப்பட்டது மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை ரொம்ப நாளா இருக்குது. அது இப்போது எந்த நிலையில இருக்கு?

 

பதில்: இது சம்பந்தமாகவும் எங்களுடைய அடுத்த திங்கட்கிழமை ஜனாதிபதியோடு நடக்க இருக்கிற சந்திப்பில் அதை ஒரு முக்கிய விஷயமாக முன்னிறுத்தி நாங்கள் பேச இருக்கிறோம். தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்ற எல்லா பிரதேசங்களிலும் யுத்த காலத்தில் ராணுவமும் அரச படைகளும் கையகப்படுத்திய தனியார் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் என்று அரசாங்கங்கள் மாறி மாறி சொல்லி வந்திருக்கின்றன. இந்நிலைமையில் அது சம்பந்தமான இன்னும் நிலுவையில் இருக்கின்ற விஷயங்களை வலியுறுத்தி நாங்கள் பேச இருக்கிறோம் இவ்வாறு ரவூப் ஹக்கீம் கூறினார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *