முசிறி அருகே ஜம்புமடை கைகாட்டி பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்…போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை..75க்கும் மேற்பட்ட பெண்களுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாளசிராமணி மற்றும் ஜடமங்கலம், ஜம்புமடை ஆகிய 3 கிராமங்களில், தனியார் நிறுவனம் கோழிப்பண்ணை அமைத்து செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இப்பகுதியில் மேலும் புதிதாக கோழிப் பண்ணைகளை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர், இதனால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்,கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், முசிறி சார் ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 1-ந் தேதி 3 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து துறையூர் – நாமக்கல் செல்லும் சாலையில் ஜம்புமடை கைகாட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோழிப்பண்ணை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லாததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் இன்று மீண்டும் ஜம்புமடை கைகாட்டியில் மீண்டும் 2-வது முறையாக சாலையில் அமர்ந்து கோழிபண்ணை தடை செய்யவும்,

கோழிப்பண்ணைகளை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன முழககங்கள் எழுப்பியவாறு சாலையில அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக துறையூர் – நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தத, தகவல் அறிந்த முசிறி வட்டாட்சியர் வீரப்பன், டிஎஸ்பி முத்துக்குமார், தா.பேட்டை காவல் ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை.. சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments