சென்னை சேலையூரை சேர்ந்த மோசஸ் தாமஸ்ராஜ் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே 12,000 சதுர அடி நிலத்தை பொன்மலை பட்டியைச் சேர்ந்த மனோகரன் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.

நிலத்தை வாங்கிய பிறகு, அதற்குரிய பட்டா பெறுவதற்காக மோசஸ் தாமஸ்ராஜ் விண்ணப்பித்துள்ளார். அப்போது இப்படி ஒரு நிலைமையை அப்பகுதியில் கிடையாது என தாசில்தார் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோசஸ் தாமஸ் ராஜ் இதுகுறித்து மனோகரிடம் கேட்டபோது, அவர் இதனை தீர்த்து வைப்பதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட மோசஸ் தரப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23.09.2025 அன்று நில அளவையர் நேரில் ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்தப் பத்திர எண்ணின்படி நிலத்தில் எந்தவிதமான இடங்களும் இருக்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக சான்று வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக நிலத்திற்கு உண்டான பணத்தை செலுத்தி ஏமாந்து, மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், தன்னை ஏமாற்றிய மனோகரன் மீதும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மோசஸ் தாமஸ் ராஜ் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments