திருச்சி -சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் திருச்சியில் தேசியக்கொடி பேரணி – தேசியக்கொடி ஏந்தியவாறு வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டு 300க்கும் மேற்பட்டோர் பேரணி.இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றி மூன்று நாட்கள் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர்மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதேநேரம் சுதந்திரத்தை பேணிகாப்போம், தாய் நாட்டை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் இன்றையதினம் திருச்சியில், திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.மலைக்கோட்டை தபால் நிலையத்திலிருந்து இருந்து புறப்பட்ட தேசியக்கொடி பேரணி, தெப்பக்குளம், மேலபுலிவார்ரோடு வழியாக மரக்கடைவரை சென்றடைந்தது.

பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த தேசியக்கொடி பேரணியில் மாநில இணைப் பொருளாளர் டாக்டர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டவாறு கையில் தேசிய கொடியினை ஏந்திக்கொண்டு பேரணியில் பங்கேற்றுச்சென்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments