முசிறி – மணமேடு இடையேயான கொந்தம் வாரி பாலத்தை அகலப்படுத்த ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் கோரிக்கை! முசிறி – மணமேடு இடையே NH-381B தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொந்தம் வாரி பாலத்தின் அகல குறைபாட்டின் காரணத்தினால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பையும், சீரான போக்குவரத்தையும் கருத்தில் கொண்டு, இந்தப் பாலத்தை முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்த வேண்டும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்.

சுமார் 12 மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் போக்குவரத்துப் பாதையாக இச்சாலை அமைந்துள்ளதால், உள்ளூர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற, கொந்தம் வாரி பாலத்தை விரைந்து அகலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்.
#highways #bridge #infrastructure #musiri #traffic #roads #development #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments