Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தெப்பக்குளம் சுற்றி 200 வண்ண மலர் மரங்கள் – சாரதாஸ் நன்கொடை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா மரக்கன்றுகளை 10 அடி உயரம் கொண்ட 200 மரங்கள் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.வீர் பிரதாப் சிங் இ.ஆ.ப., ஆகியோர் இன்று (17.08.2026) மரங்களை நட்டு தொடங்கி வைத்தார்கள் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா 200 மரங்கள் திருச்சி சாரதாஸ் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம் என்.எஸ்.பி ரோடு பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தின் நீர் முழுவதும் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணிநடைபெற்றது.

இக்குளம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும்.  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் ரூ.25.00 கோடி I மதிப்பீட்டில்தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் நடைபாதை , பூங்கா அமைத்து அழகுப்படுத்துவதற்கான பணியினை மேற்கொள்வதற்கு மதிப்பீடு மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தெப்பக்குளத்தை அழகுபடுத்தி பூங்கா அமைத்து பொது மக்களுக்கு இப்பகுதி ஒரு பொழுதுபோக்கு அம்சமாக அமைக்கப்படும்.

இந்நிகழ்வில் நகரப் பொறியாளர் திரு. அண்ணாதுரை, உதவி ஆணையர் திரு. சீனிவாசன் நன்கொடையாளர் திரு. சாரதாஸ் ரோஷன் மணவாளன் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் திரு. வைத்தியநாதன் மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் .

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *