Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துறையூர் அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ – புகை மண்டலம்

துறையூர் அருகே நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ – பல மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு போராடி வருகின்றனர் தீ அணைக்கப்பட்டு புகை மூட்டமாக தொடர்ந்து புகைந்து வருகிறது..அப்பகுதி மக்கள் பல்வேறு நிலைகளில் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்..திருச்சி மாவட்டம், துறையூர் அருகே வாலிஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 டன்னுக்கும் மேலான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்த துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பெரம்பலூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பல மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு கொண்டு வந்தன தொடர்ந்து புகைந்து புகை மூட்டமாக கசிந்து வருகிறது, இதனிடையே குப்பைகள் எரிவதால் ஏற்பட்டுள்ள கடுமையான புகை துறையூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி புகை மண்டலம் சூழ்ந்தது, இதனால் பொதுமக்கள் புகை மற்றும் மாசு கலந்த காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டு சிலருக்கு மூச்சுத் திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மாவட்ட அலுவலர் அனுசியா மற்றும் மாவட்ட உதவி அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, தீயணைப்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், ஆனால் தொடர்ந்து புகைந்து புகை மண்டலமாக உள்ளது, முழுவதும் அனைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்..

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *