Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர முழக்க போராட்டம்

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் சங்கம் சார்பாக 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம்… திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பனிமலை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய சங்கத் தலைவர் சிங்கராயன் தலைமையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவை தொகைகள் உடனடியாக வழங்க வேண்டும், 1-4-2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பதிவு செய்த அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும், GCC என்ற பெயரில் தனியார் மூலம் மின்சார பேருந்துகளை இயக்காமல் அரசே இயக்க வேண்டும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்து காண்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு கால பணன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரெங்கராஜன் பேசியது : திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையை தனியாருக்கு கொடுப்பதாக இருந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் பிறகு தவெக அரசு அந்த நிலைப்பாட்டை எடுக்காது என நினைத்தோம், ஆனால் அதே நிலைப்பாட்டை இந்த அரசும் பின் தொடர்வது கண்டிக்கத்தக்கது. மேலும் சட்டப்பேரவையில் பெண்களுக்கு இலவச பேருந்து, மின்சார பேருந்தை தனியாருக்கு ஒப்படைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே போக்குவரத்து துறை பல்வேறு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற அறிவிப்புகளால் மேலும் நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்கும். ஆகையால் தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அனைத்து தொழில் சங்கங்களையும் ஒன்றிணைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *