Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மலைக்கோட்டையில் பழ வியாபாரத்தில் எடை மோசடி பொதுமக்கள் புகார்

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்,  உணவு பாதுகாப்பு அதிகாரி, திருச்சி மாநகராட்சி ஆணையர், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்& .திருச்சி மக்கள் தொடர்பு அதிகாரி அனைவருக்கும் வணக்கம்… இந்தப் பதிவில் பொதுநலன் கருதி கூறிக் கொள்வது என்னவென்றால் திருச்சி மாநகரப் பகுதியான “மலைக்கோட்டை” ரத்தினா ஸ்டோர் பகுதியின் அருகில் தள்ளு வண்டியில் பழ கடைக்காரர்கள் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.அவர்கள் பொதுமக்கள் வாங்கும் பழங்கள் மிகவும் எடை குறைவாக அதாவது ஒரு கிலோ எடைக்கு 550 முதல் 570 வரை பழங்களின் எடையில் உள்ளதாக தகவல்கள் வெளிவருகிறது. 420 முதல் 430 வரை குறைவாகவே உள்ளதாக இன்று சுமார் 12 மணி முதல் 1.30 மணி வரை இது தொடர்பாக அந்தப் பகுதியில் என்ன நடந்தது என்று உண்மை நிலவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக அந்தப் பகுதியில் மக்கள் நெரிசல் கூட்டம் அதிகமாக உள்ளதால் இந்தப் பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து சமாதானம் படுத்திவிட்டு சென்று விட்டனர். மேலும் இது தொடர்பாக அந்தப் பகுதியில் தள்ளுவண்டி பழ கடைக்காரர்கள் பொதுமக்களிடம் எடை குறைவாக தான் பல மாதங்களாக விற்பனை செய்து வந்துள்ளது இன்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த பதிவில் பழ கடைக்காரர்களை குறை கூறவில்லை, விமர்சிக்கவும் இல்லை, பழங்கள் வாங்கும் பொதுமக்களிடம் இது போன்ற தவறான செயல்கள் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும் அந்தப் பகுதியில் இனியாவது இது போன்ற தள்ளு வண்டியில் பழக்கடை வைத்து விற்பனை செய்து வரும் கடைக்காரர்கள் இனியாவது மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்த பதிவில் தள்ளுவண்டி பழ கடைக்காரர்கள் எடைக்கல்லில் பொதுமக்களிடம் விற்பனை செய்த பழங்கள் எடை குறைவாக உள்ள வீடியோவை பதிவில் போடப்பட்டுள்ளது. இப்படிக்கு பொதுமக்கள் சார்பாகவும், பொதுநலன் கருதியும் T.ரவிச்சந்திரன்,M.Sc.,B.Ed.,BL., வழக்கறிஞர், திருச்சி. Cell:9385694055

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *