Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

திருச்சி  தலித் மக்களுக்கான சட்டபூர்வமான உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டும் – திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர்.திருமாவளவன் பேட்டி..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ….. எங்களது கட்சியின் பொதுச் செயலாளர் இது குறித்துசுட்டிக்காட்டி உள்ளார்.கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது.

இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடவாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அது ஏற்புடையதல்ல இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.அதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், SFI உள்ளிட்ட மாணவர் அமைப்பினரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட அதிகாரிகள் மீதான அரசின் நடவடிக்கை மென்மையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு .

இது குறித்து ஏற்கனவே எனது கருத்தை கூறியுள்ளேன்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்படியே வழிமொழிகிறது. இந்த அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தாத வகையிலான அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.திமுக ஆட்சிக் காலத்தில் தலித் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னிஅரசு பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லவில்லை. திரித்துப் பேசக்கூடாது.

பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தோம் என கூறினார்கள் அது உண்மைதான். பொதுத்தொகுதிகளில் நிற்கு வைப்பது இயல்ப ஒன்றுதான்.தலித்துகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடியும். ஆனால், தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது. அது சட்டப்படி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்துவதை ஏதோ அவர்களுக்கு பரிதாபப்பட்டு நிறுத்தினீர்களா அல்லது தகுதியானவர் அடிப்படையில் நிறுத்தினீர்களா என கேள்வி எழுப்பு உள்ளார்.வன்னியரசு தவறாக பேசினார் என்று கேள்வி எழுப்பு உள்ளனர். தலித்துகளை பொது தொகுதிகளில் நிறுத்துவது இறக்கப்பட்டு செய்வது போல என்று சொல்லக்கூடாது என அவர் கூறினார்.

தவெக அரசு இந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்குதவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவித்தார்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *