சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் மானியத்தோடு வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் மானியத்தோடு வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் புற உலகு சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளைத் தவிர பிற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75,000 வரை வங்கிக்கடன் வழங்கிட சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கி மூலமாக தங்களது விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25,000 மானியமாக வழங்கப்படும்.

எனவே சுயதொழில் செய்து தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது http://tiruchirappalli.nic.in - Department of Differently Abled Persons என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுடன் இவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் : 0431-2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd