புதிய பேருந்து சேவையை துவக்கி பேருந்தை ஓட்டிய ஶ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ

புதிய பேருந்து சேவையை துவக்கி பேருந்தை ஓட்டிய ஶ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ

திருச்சியில் இருந்து மணப்பாறை காகித ஆலைக்கு புதிய பேருந்து சேவையை ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் M.பழனியாண்டி இன்று தொடங்கி வைத்தார்.

காகித ஆலை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர். பின்னர் இந்த புதிய பேருந்தை எம்எல்ஏ பழனியாண்டி சிறிது தூரம் ஓட்டினார்.

இதனையடுத்து ஶ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ M.பழனியாண்டி தனது தொகுதிக்குட்ட பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்தில் (TNPL 2) செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஆலை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr