ஆரோக்கியத்தை விரும்பும் மக்களுக்கு வீடு தேடி காலை உணவு -அசத்தும் திருச்சி இளைஞர்கள்

ஆரோக்கியத்தை விரும்பும் மக்களுக்கு வீடு தேடி காலை உணவு -அசத்தும் திருச்சி இளைஞர்கள்

அவசரமான உலகிலும் தங்களது ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுபவர்களுக்கு என்று திருச்சியில் புதிதாக ஆரம்பமாகி இருக்கிறது குட் டு கோ நிறுவனம்

தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதோடு புதிதாய் ஒன்றை மக்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும் என்று புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர் திருச்சியை சேர்ந்த பொறியல் பட்டதாரிகள் மணி பாரதி மற்றும் ராஜசேகர்,

தங்களது புதிய தொடக்கத்தை பற்றி மணி பாரதி பகிர்ந்து கொள்கையில்,

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையில் பணியாற்றி வந்தேன்.

 துரித உணவுகள் அதிகமாக கிடைக்கும் இந்நகரில் ஆரோக்கியமாக ஏதேனும் எளிதில் இருக்கின்றதா என்ற கேள்வி என்னுள் இருந்தது.

 அந்த கேள்விக்கு விடையாக நாமே அதை ஏன் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தில் தொடங்கியதுதான் GOOD2GO  

உடல் ஆரோக்கியத்தின் மீது கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அனைவரும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் அந்த வகையில் அவர்களுக்கு காலை உணவு சரியான ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தில் தொடங்கினோம் ...

  சத்தான காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குவது உங்கள் உடலுக்கு நீண்ட கால ஆற்றலை அளிக்கும். உங்கள் நாளை ஆரோக்கியமாக தொடங்க இது ஒரு சிறந்த வழியாகும். மேலும் பல மணிநேரங்களுக்கு உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். எனவே, அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் கூடிய சமநிலையான காலை உணவை உட்கொள்வது அவசியம்.

பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன.  

 ஆரஞ்சு கிவி திராட்சை பழம்போன்ற சிட்ரஸ் பழங்கள் வாழை, பப்பாளி, மாம்பழம், ஆப்பிள், தர்பூசணி, மாதுளை போன்ற பழவகைகளை தேர்வு செய்து விற்பனை செய்ய தொடங்கிய குறுகிய காலகட்டத்தில் பலரும் இதை விரும்ப ஆரம்பித்துள்ளனர்..

ஆரோக்கியத்தில் மட்டுமின்றி சுகாதாரத்திலும் கவனமாக இருந்து எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான உணவை கொண்டு சேர்க்கிறோம் 

எதிர்வரும் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவர்களது டிபன் பாக்ஸில் ஆரோக்கியமான உணவு கொண்டு செல்ல முயற்சித்து வருகிறோம்..

https://www.instagram.com/good2_go_nb?igsh=MWtxbW84Z2FzcnJjdA==

எங்களுடைய இந்த புதிய முயற்சியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்கள் மிகவும் பயன்பட்டன இப்போது திருச்சி கே கே நகரில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் கூடிய விரைவில் திருச்சி மாநகர் முழுவதும் அனைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்கிறார் மணிபாரதி 

சமூக வலைதளங்களில் தங்களுடைய நேரத்தை விரயம் செய்யும் இளைஞர்களுக்கு மத்தியில் புதிய முயற்சியோடு தங்கள் வாழ்வில் சாதிக்க துடிக்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision