திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகமான காமராஜ் மன்றத்தின், ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் தொடங்கியது.
மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்தை மேயர் அன்பழகன் வாசித்தார்.
கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்கும் மையம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் அமைக்க மாமன்ற கூட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பின் மகேஸ் பொய்யா மொழி அங்கு அந்த மையம் அமைக்க கூடாது என கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அந்த பகுதிகளை சேர்ந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் 25 பேர் வெளிநடப்பு செய்துள்ளார்கள். இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டதற்கு என்பதை தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments