திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே உள்ள சின்ன கோனார்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது வயலில் நெல் அறுவடை பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரையை முழுங்கியவாறு கிடந்ததைக் கண்ட பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்

பிடித்தனர். உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர் வேல்முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பு பிடிப்பான் உதவியுடன் பாம்பை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் பாம்பு அவர்களுக்கு சிறிது நேரம் ஆட்டம் காட்டியது .சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக பாம்பை பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர் .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments