Site Logo mobile
Search Icon
Mobile Gif
Startups

கிரியேட்டிவ் இந்தியா நிறுவனத்தின் அமேசான் விற்பனை பயிற்சி

இன்றைக்கு பொருளாதாரத்தில் மிகப் பெரும் விற்பனை சந்தையாக செயல்படுவது அமேசான் நிறுவனமூம் ஒன்று. அந்நிறுவனத்தில் நம்முடைய பொருள்களையும் எவ்வாறு விற்பனை செய்வது என்பது குறித்த பயிற்சி வகுப்பு அமேசான் ஆன்லைன் விற்பனை பயிற்சி. கிரியேட்டிவ் இந்தியா  நிறுவனம் 
கடைக்கோடி கிராமங்களில் உள்ள இல்லத்தரசிகளும், உற்பத்தியாளர்கள், வர்த்தகர் தொழில் முனைவோர் முழு /பகுதி நேர வருமானம் தேடுபவர்கள்   குறைந்த முதலீட்டில் வணிகத்தை வளர்ப்பதற்கு வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாய் பயிற்சி வகுப்பில் ஆலோசனை வழங்க இருக்கின்றோம்.

கிரியேட்டிவ் இந்தியா சுதாகர்  மகாதேவன், இப்பயிற்சி வகுப்பு யாருக்கெல்லாம் பயன்படும் அது எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். இல்லத்தரசிகள் மாணவிகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் வணிகர்கள் என எவரும் இங்கு விற்பனை செய்ய இயலும் .நிறைய இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தபடியே அமேசானில் விற்கிறார்கள் 15 வயது சிறுவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அதிகம் பேருக்கு இருக்கும் சவாலான ஒன்று  ஆங்கிலப்புலமை இல்லை அதனால் என்னால் செய்ய இயலாது என்று பலரும் தயங்குகின்றனர்.

ஆனால் மொழி ஒரு தடையல்ல அமேசானில் எவ்வாறு விற்பனை செய்வது என்ற தெளிவும் அதை தொழில்நுட்பமும் தெரிந்து கொண்டால் மட்டுமே போதுமானது நம்மிடம் பொருட்கள் இல்லை எனினும் நாம் விற்க விரும்பும் பொருள்களை பிறரிடமிருந்து வாங்கி நம்முடைய பெயரில் விற்றுக் கொள்ளலாம் நல்ல பொருளை தேர்வு செய்வது என்பது பற்றியும் நாங்கள் வகுப்பில் பயிற்சி அளிக்கிறோம்.

இந்த பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் நடைபெறுகிறது. இவ்வகுப்பில் முக்கியமாக கற்றுத்தரப்படும் பயிற்சிகள் அடிப்படைத் தேவைகள் அமேசானில் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி தொடங்குவது எப்படி ? எதிர்கொள்ளும் நடைமுறை சவால்களை வெற்றி பெறுவது எப்படி ? போன்ற சில பொதுவாக இருக்கும் பல சந்தேகங்களை தீர்த்து அவர்களுடைய ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்கு உதவ எங்கள் நிபுணர் குழு இருக்கும் 
இந்த பயிற்சி வகுப்புகள் முக்கியமாக தொடங்கப்பட்டது. இல்லத்தரசிகளுக்கு தங்களிடையே இருக்கும் பல திறமைகளை அவர்கள் இதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளலாம்.

அவர்கள் பொருளாதார ரீதியில் குடும்பத்தாருக்கு உதவிகரமாக இருப்பதற்கும் இப்பயிற்சி வகுப்புகள் உதவும். எப்பொழுதுமே  சாதிக்க நினைப்பவர்களுக்கு சாதனையாளர்கள் வாழ்க்கை ஓர் வழிகாட்டியாக அமையும் பெரியகுளத்தில் ராணி என்பவர் அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் இதன் மூலம் மாதத்திற்கு 1800 ஆர்டர்களை பெற்று இன்றைக்கு பொருளாதார ரீதியில் நல்லதொரு நிலையில் இருக்கிறார்.  

இப்படி கனவுகளுடன் திறமைகள் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவுவதே இதனுடைய முக்கிய நோக்கம். திருச்சியில் 12,000 பேர் அமேசானில் பதிவு செய்துள்ளனர் ஆனால் 15பேர் மட்டுமே தொடர்  விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம்  அதனை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருப்பதுதான்.

அப்படி இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே இப்பயிற்சி வகுப்புகள் பயிற்சி வகுப்புகளோடு இல்லாமல் அவர்கள் முதல்நிலை வெற்றி பெற்ற அவர்களுடைய விற்பனை அதிகரிக்கும் வரை அவர்களுடன் நாங்கள் பயணிப்போம். இந்த பயிற்சி வகுப்பு ஜூன் மாதம் முழுவதும் புதன்கிழமை ஆங்கிலத்திலும் சனிக்கிழமைகளில் தமிழிலும் 11 மணியிலிருந்து 12 மணி வரை  நடைபெறும். 99 ரூபாய்க்கு பதிவு செய்து  நாளையதினம்  தொடங்கும்
வகுப்புகள் கலந்துக்கொண்டு பயிற்சி பெறலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *