திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே தெரணிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பாஜக கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது தெரணிபாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள பெரியார் நகரில் 50திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்கள் வந்து செல்லும் பாதையில் குறுக்கே சிறு ஓடை உள்ளது. இந்த ஓடையினை அண்மையில் தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவர் தூர் வாரியதால், ஓடை பள்ளமானது. இதனால் தற்போது அந்த பள்ளமான ஓடையில் இறங்கி தான் அப் பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான மக்கள் ஓடையின் குறுக்கே சிறு பாலம் கட்டிக் கொடுக்க ஊராட்சி மன்றத் தலைவரிடமும், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல முறை புகார் அளித்தனர்.
புகார் அளித்தும் கடந்த 6 மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி பொது மக்கள் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கல்லக்குடி காவல் நிலையத்தில் அனுமதி மறுத்த நிலையில் புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Advertisement
இப்போராட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 50 திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த கல்லக்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பிரச்சினை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோஸ்பின் ஜெசிந்தா தலைமையில் அவரது அலுவலகத்தில் மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போதிய நிதி வசதி இல்லாததால் தான் காலதாமதம் விரைவி சிறுபாலம் கட்டப்படும் என்றார் அதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments