நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஜபல்பூர் என்ற இடத்தில் படகு சவாரியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு அண்ணா நகர் பகுதி -3 கதவிலக்கம் HC 369 என்ற முகவரியை சேர்ந்த காமராஜ் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் ஜபல்பூர் OFT நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜபல்பூர் அருகே உள்ள பருக்கி அணைக்கட்டில் இன்று (01.05.2026) அவரது குடும்பம் மற்றும் தாராபுரத்தை நிரந்தர முகவரியாக கொண்ட அவரது மைத்துனர் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்துள்ளார்.
அப்போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் காமராஜ் (வயது 38), அவரது மனைவி கார்குழலி (வயது 38) அவரது இளைய மகன் தமிழ்வேந்தன் (வயது 05) ஆகியோர்கள் உயிரிழந்து விட்டதாகவும், அவரது மூத்த மகன் புவிதரன் (வயது 11) உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கார்குழலி என்பவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும்,மீதமுள்ள நபர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments