திருச்சி மாவட்டம், திருவரங்கம் (ஶ்ரீரங்கம்) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம், பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த எனது தேர்தல் அலுவலகம் ஒன்றை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளார்கள். அத்துடன் அங்கு வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தையும் கிழித்துள்ளனர். 
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
மேலும் தேர்தல் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் எனக்கும், எமது கழக நிர்வாகிகள், தோழர்களுக்கும் எதிராக வன்முறை செயல்களை அரங்கேற்ற எதிர் கட்சிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
உண்மையில் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, பாதுகாப்பாக நடைபெறுமா என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது.
இந்த பிரச்சனையில் @ECISVEEP @TNelectionsCEO உடையாக தலையிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் பாதுகாப்பு எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 
TVK ரமேஷ்திருவரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube



Comments