திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே திருச்சி முதல் கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர மாவட்ட விவசாய அணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது, நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை கத்தியால் கிழித்தும், அலுவலகத்தை 20 க்கு 20 அடி பரப்பளவு உள்ள கீற்று கொட்டகையை தீயிட்டு கொளுத்தி உள்ளனர், முழுவதும் எரிந்து சேதம் மதிப்பு ரூ 50,000, தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள் குறித்து திருச்சி மாநகர மாவட்ட விவசாய அணி செயலாளர் வீர சிவா பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,

போலீசார் நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தியும் கத்தியால் கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர்,
தேசிய நெடுஞ்சாலை அருகில் தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இது போன்ற சம்பவங்கள் நடப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments