திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி துறை மற்றும் தில்லை நகரில் செயல்பட்டு வரும் டால்பின் சிறப்பு பள்ளியோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (9.09.2021) கையெழுத்திட்டுள்ளனர். திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி என். கோபால்தாஸ் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி தலைமை நிர்வாக அதிகாரி தில்ஜித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரராமன், டால்பின் சிறப்பு பள்ளியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் பிரவீனா கார்மல்
மற்றும் திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வி துறையின் துறைத தலைவர் டாக்டர்.பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய நோக்கமே இரு நிறுவனங்களில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் அவர்களுடைய திறனை மேம்படுத்துவதற்கும் இரு நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே.
புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்பு ஒப்பந்தத்தில் உள்ள சிறப்பம்சங்கள் :
சிறப்பு பள்ளி மாணவர்களின் பட்டப் படிப்பை தொடர்ந்திட, உடற்கல்வி துறையில் ஆராய்ச்சி நடத்திட உதவுவது. இரு நிறுவனங்களின் ஆதரவுடன் குறுகியகால படிப்புகளை வழங்குதல். வேலை வாய்ப்புகள் பெறுவதற்கான பயிற்சி திட்டங்களை மேற்கொள்வது மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் அறிவு திறன்களை வளப்படுத்துதல். உடல் செயல்பாடுகளின் அடிப்படையில் சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அடைய வழிகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுதல்.
புத்தகங்கள், ஒளிக்காட்சி உபகரணங்களை பயன்படுத்துவதில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் ஆக இது அமைந்துள்ளது. மேலும் கருத்தரங்குகள், கல்வி மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தி, இணைந்து செயல்படுவதற்கு உதவும் வகையில் இரு நிறுவனங்களும் ஒருமித்த கருத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments