சமூக நலன் மற்றும் இயற்கை பாதுகாப்பிற்காக VDart நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் VDart நிறுவனம் தற்பொழுது புது முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள VDart அலுவலகத்தில் வாராந்திர வெள்ளி கண்காட்சியை நடத்துகிறது.
உலகளாவிய திறமை மேலாண்மை நிறுவனமான VDart Inc, மார்ச் மாதம் முழுவதும் சிறு மற்றும் குறு பெண் தொழில்முனைவோருக்காக VDart ஊழியர்களுக்கு தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யவும், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், இந்த கண்காட்சி ஒரு தளத்தை வழங்கும். மேலும் மார்ச் 3ம் தேதி வெள்ளிக்கிழமை பெண் தொழில் முனைவோர் காண கண்காட்சி தொடங்குகிறது.
இதனை தொடர்ந்து மார்ச் மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த கண்காட்சி நடத்தப்படும். இந்த கண்காட்சியில் இடம்பெற விரும்பும் பெண் தொழில் முனைவோருக்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் உங்கள் பெயர், வணிகத்தின் தன்மை மற்றும் தொடர்பு எண்ணை இந்த 9901965430 தொலைபேசி எண்ணிற்கு அனுப்பலாம். அதன்பின் விவரங்கள் நேரடியாகப் பகிரப்படும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments