Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூரில் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி ஆர்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதி படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

தற்போதைய தமிழக அரசு தேர்தலுக்கு முன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஐந்து ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் ஐந்து ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்து உள்ள விவசாய கடன் பெற்றிருந்தால்அவர்கள் பெற்றுள்ள விவசாய கடன் பாதி தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது.இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்து உள்ளது.

இந்நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி விவசாயிகள் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் ரூ 50 ஆயிரத்திற்கு கீழே விவசாய கடன் பெற்றிருந்தால் அவர்களின் விவசாயகடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.அதற்கு மேல் கடன் பெற்றவர்களின் கடன்கள் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதி மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தித்து உள்ளது.

 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூரில் அனைத்து கட்சியினரும் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திருவெறும்பூர் அனைத்து பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் அதேபோல் உயர்த்தியுள்ள உரங்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், செல்வராஜ், அதிமுக நிர்வாகிகள் எஸ் கே டி கார்த்திக், முத்துக்குமார், திமுக நிர்வாகி தங்கவேல்,, வேலுச்சாமி. புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பிச்சைமுத்து, உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் விவசாயிகளும் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *