Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் கணபதி நகர் பகுதியில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ளூர் அரியமங்கலத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கடந்த ஒரு வருடம் ஆக பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தரம் பிரித்து வைக்க இருந்த பழைய பிளாஸ்டிக்குகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது .காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென பரவியது.இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கும் , காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

அதிகாலையில் நடந்த இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *