Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோவில் மண் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பதுடன் 16 விதமான தோஷங்களை நீக்கி அருள்புரிவதாக ஐதீகம்.

2000 ஆண்டுகள் பழமையான திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம், திருவானைக்காவல் பாப்பம்மாள் சத்திர கட்டளைக்கு உட்பட்ட இத்திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தர்மசம்வர்த்தினி சமேத பூமிநாதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வலம் வந்து கொடிமரத்தின் முன்பு எழுந்தருளியபிறகு, கொடிமரத்திற்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு ரிஷபகொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தினசரி சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா வரும் வைபவமும், 26 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும், 29ஆம் தேதி வைகாசி விசாக திருத்தேர் வடம்பிடித்தல் வைபவமும் நடைபெற உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *