Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விவசாய கடன் தள்ளுபடியில் மோசடி – தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை பெற்றுத்தர காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்களுக்கு மனமில்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி..தமிழ்நாட்டில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து இன்று திருச்சி மாநகர், மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக மாவட்ட செயலாளர், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் கூறுகையில்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் அடிப்படையில் இன்று திருச்சி மாநகர் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தவெக தேர்தலுக்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் 300 அறிவிப்புகளை கொடுத்திருந்தார்கள். அதில் குறிப்பாக விவசாயிகள் கடன் சிறுகுரு விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதை அப்படியே மாற்றி 75 ஆயிரத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு அப்படியே தள்ளுபடி என்றும், அதற்கு மேல் வாங்கியவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்றும் அறிவித்தார்கள். ஆனால் 2 நாட்களுக்கு முன்னால் 1 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 75 ஆயிரம் என்றும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 35 ஆயிரம் தள்ளுபடி என்று அறிவித்து உள்ளார்கள். இது மோசடியான அறிவிப்பு ஆகும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை முறையாக அமல்படுத்த வேண்டும் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் அனைவரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் ஆகையால் உடனடியாக அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் கர்நாடகா அரசு தமிழ்நாட்டின் உரிமை காவேரி உரிமையை பறிக்கும் விதமாக தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவில்லை இவற்றை சட்டரீதியாக தவெக மாநில அரசு எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்டித்து தான் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

அரசு தற்போது அறிவித்துள்ளது இது குறித்து எந்த பதிலாக இருந்தாலும் எங்களுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி அவர்கள் தெரிவிப்பார்.

சட்டப்பேரவை நேரலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுவது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் தொடர்ந்து 16 முறை சட்டமன்றத்தில் இருந்து உள்ளேன் அதிமுக அம்மா ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை ஒரு கோவில் போன்று இருந்தது. உள்ளே சென்றாள் மன நிம்மதி கிடைக்கும் அளவிற்கு இருந்தது.

ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆளாளுக்கு ஒன்று பேசுவது போன்று நடக்கிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் பயன் கிடைக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்தஅவர்,

முற்றிலுமாக பொய்யான தகவலை அவர் தெரிவித்து வருகிறார் மேகதாதில் தடுப்பணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் முற்றிலும் மறுக்கப்படும் ஏற்கனவே தமிழ்நாட்டில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேகதாதுவில் தடுப்பணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் முற்றிலும் மறுக்கப்படும் இதனால் டெல்டா மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும். இந்த சூழ்நிலையில் மாநில அரசு ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை என்பது தான் நமது கேள்வி? என்றார்.

மேகதாது பிரச்சனை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அதே போன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருக்கிறார்கள் அவர்கள் தங்களது கட்சித் தலைவரிடம் பேசி இதற்கு தீர்வு காண முடியும் ஆனால் அவர்களுக்கு தீர்வு காண மனமில்லை. மேகதாது பிரச்சனையில் தொடர்ந்து போராடுவது அதிமுக மட்டும் தான் அனைத்து சட்டப் போராட்டங்களையும் மேற்கொண்டு உள்ளோம்.

அதேசமயம் நாடாளுமன்றத்தை முடக்கும் அளவிற்கு போராட்டத்தை முன்னெடுத்து உள்ளோம். கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தீர்ப்பு கிடைத்துள்ளது அதன்படி தமிழ்நாட்டிற்கு மாதாந்திரம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கான முயற்சியை இது நாள் வரை மாநில அரசு எடுக்கவில்லை என்பதை குற்றச்சாட்டு என தெரிவித்தார்.

 

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *