Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல் – நிர்வாகி நடராஜன் கைது

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜுன்.06 – மேல அடையவளஞ்சான் வீதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் நடராஜன் என்ற பாதை யாத்திரை நடராஜன் (வயது 65). இவர் ஸ்ரீரங்கம் ரெங்க நகரிலுள்ள(ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) காங்கிரஸ் கமிட்டி காமராஜர் அரங்கம் உள்ளது, அதில் முக்கிய நிர்வாகியும், ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் காமராஜர் அரங்கம் காங்கிரஸ் கமிட்டி அலுவகத்தில் கட்டுக்கட்டாக ஹான்ஸ் (குட்கா) விற்பனை செய்வதாக ஸ்ரீரங்கம் போலீஸ்சாருக்கு நேற்று ஜுன்.05 இரவு ரகசிய தகவல் வந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீஸ்சாரின் தேடுதல் வேட்டையில்104 ஹான்ஸ் பாக்கெட்கள் (அளவு 2 கிலோ 80 கிராம்) போதை தடுப்பு போலீஸ்சாரிடம் கையும் களவுமாக சிக்கினார் பாதை யாத்திரை நடராஜன். ஸ்ரீரங்கம் காங்கிரஸ் கமிட்டி காமராஜர் அரங்கில் பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ்(குட்காவால்) ஸ்ரீரங்கம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் பெருகிய வந்த போதை வஸ்துகளின் நடமாட்டதை முற்றிலும் கட்டுப்படுத்த, புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக போதை வஸ்துக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், ஒழித்துக் கட்ட மும்முரம் காட்டிவருகிறது. இதற்காக போதை தடுப்பு போலீஸ் ஸ்பெஷல் டீம் போடப்பட்டு போதை வஸ்துகளின் நடமாட்டத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கம் போலீஸ்சார் பாதை யாத்திரை நடராஜன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *