வீட்டிலேயே  கேக் செய்து அசத்தும்  திருச்சி சகோதரிகள் 

வீட்டிலேயே  கேக் செய்து அசத்தும்  திருச்சி சகோதரிகள் 

சாக்லேட், கேக், பிஸ்கட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.

 அக்காவின் மகளுக்கு கேக் செய்து கொடுக்க ஆரம்பித்து பின்னர் ஆர்வத்தின் பேரில் தொடர்ந்து செய்ய முயற்சி செய்து வெற்றி கண்ட ஐஸ்வர்யா திபீகாவை சந்தித்த திருச்சி விஷன்....

இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு முறையில் தங்களுடைய திறமைகளையும் தங்களுக்கு பிடித்த வற்றையும் செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவரும்  ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர் .
அப்படிதான் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா தீபிகா  ஆசையாக கேக் செய்ய ஆரம்பித்தனர் .பின்பு உறவினர்கள், நண்பர்கள் என வட்டாரம் நீண்டது.பின்பு
  கேக் செய்வது மிகவும் பிடித்து  அக்கா குழந்தைக்காக செய்து கொடுத்த போது குடும்பத்தினரும் ஆதரித்தனர்.  

 
வீட்டிலேயே கேக் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் 90 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை கேக் ஆர்டர்கள் தங்களுக்கு தற்போது வரத் துவங்கியுள்ளன

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக  கேக் செய்வதினை தொடர்ந்து செய்துக்கொண்டிருந்தேன். அதை இன்னும் பெரிதாக செய்யலாம் என்று தோன்றியபோது தான் 2019 இல் இருந்து இந்த Cake doe  தொடங்கினோம் .
இதற்காக பிரத்யேகமாக எந்த ஒரு வகுப்பிலும்  கற்றுக்கொள்ளவில்லை. Google youtube  தான் என் குரு என்று  சொல்லும்போதே சிரித்துக்கொண்டார்  ஐஸ்வர்யா .


      நண்பர்களின் பிறந்தநாளுக்கு அவர்களுக்கு பரிசாக வழங்குவதற்காக கேக் செய்ய தொடங்கினேன் ஒரு நாள் என் நண்பர் என் கேக்குகளின் புகைப்படங்களை  பேஸ்புக்கில் பதிவிடவும் அனைவரும் என்னிடம் கேட்டனர். எனவே இதனை தொடங்கலாமா என்று வீட்டில் உள்ளோரிடம் கேட்டு வீட்டிலேயே செய்து வருகிறோம்.என் அக்கா தீபிகா எனக்கு மிகவும் உறுதுணையாக  என்னோடு சேர்ந்து பயணிக்கிறார்.

இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது  என்ற பாடல் வரிகள் போல்  புதிய புதிய ருசியில் கேக் தயார் செய்ய  ஆர்வம் காட்டி வருகிறேன் .red velvet jar, vennillekipfrerl, brownies,  Christmas cake,  birthday cake , egglesscake,  cookies,  chocolate bonbons,scottish short bread, .macarons ,almond flour macarnos என்று ஒவ்வொன்றிலும் புதுமையாய் செய்ய எண்ணிணேண். அதேசமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் எப்போதும் கவனமாய் இருப்பேன்.  நண்பர்களை தாண்டி  இந்த பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
 கிறிஸ்மஸ் gift hamper செய்து கொடுத்தோம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தொடர்ந்து   தீபாவளி ,new year  போன்றவற்றிலும் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று  என்னுடைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று பெருமையுடன் பணியை தொடர்கிறார் ஐஸ்வர்யா!

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr