முசிறியில் செயல்பட்ட FL2 பார் தனியார் மனமகில் மன்றத்தில் சில்லறை விற்பனை செய்த மூன்று பேர் கைது, முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா நிகழ்விடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை,கலால் துறையினர் 32 பாட்டில்களும் பறிமுதல் செய்து காவல் துறையிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில்திருச்சி முதல் முசிறி செல்லும் நெடுஞ்சாலையில் ஓரத்தில் இயங்கி வரும் எப் எல் 2 ( FL2) பார் தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது, இன்று திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளும் மூடி பணியாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் FL2 மனமகிழ மன்றத்தில் உ றுப்பினர் அல்லாத நபர்களுக்கு விதிமுறைகளை மீறி மது பாட்டில்கள் சில்லரை விற்பனை செய்வதாகவும், கூட்ட நெரிசல் அதிக அளவு உள்ளதாகவும் தகவல் அறிந்த முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா நிகழ்விடத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டு மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டிருந்த விரட்டியும் ஆய்வு மேற்கொண்டார், மனமகிழ் மன்றத்தில் சில்லறை விற்பனை செய்த முசிறி பொன்னாங்கண்ணி பட்டியைச் சேர்ந்த வினோத் ( உரிமையாளர்), குளித்தலை தெப்பக்குளத் தெருவை சேர்ந்த சுதர்சன் ( காசாளர்), முசிறி திருமுருகன் நகரை சேர்ந்த சரவணன் ( விற்பனை செய்தவர்) ஆகிய மூன்று பேரை பிடித்து முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரையிடம் ஒப்படைத்தார், தொடர்ந்து கோட்ட கலால் அலுவலகம் தனி வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் முசிறி காவல் நிலையத்தில் 32 மது பாட்டில்களுடன் புகார் அளித்தார், புகாரைத் தொடர்ந்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்,

முசிறியில் செயல்படும் FL2 பார் தனியார் மனமகிழ் மன்றத்தில் 10 ரூ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டில்களை மீண்டும் பெறுவதில்லை என்றும், பாட்டிலுக்கு முப்பது ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், உறுப்பினர் அல்லாத நபர்களுக்கு அதிக அளவில் சில்லரை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments