வேலைவாய்ப்பு குறித்த வெளிப்படைத்தன்மையே Vertexcartel  நிறுவனத்தின் வெற்றி

Oct 27, 2021 - 19:18
Oct 27, 2021 - 19:27
 1115
வேலைவாய்ப்பு குறித்த வெளிப்படைத்தன்மையே Vertexcartel  நிறுவனத்தின் வெற்றி

இன்றைய நிலைக்கு பல  படித்த பட்டதாரி இளைஞர்கள்  இருக்கின்றனர்.படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டதா என்றால் இல்லை என்ற பதில்  நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாக இருக்கும்.

 வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இதே சூழலிலும்  வாய்ப்பை பயன்படுத்தி நம்மை  தனித்துவமாக்கி கொள்வது ஒருவரது சிந்தனைப்பொறுத்ததே!

 அந்த வகையில் வேலை தேடுபவர்களுக்கு உதவுவதையே தன்னுடைய வேலையாக மாற்றியிருக்கிறார் திருச்சியை சேர்ந்த குணசீலன்.Vertexcartel என்ற பெயிரில் கன்சல்டன்ஸி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

திருச்சி சிட்டி சென்டர் காம்ப்ளக்ஸ் சுந்தர் நகர், கேகே நகர் மெயின்ரோட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் 
தன் நிறுவனம் குறித்து குணசீலன் பகிர்ந்து கொள்கையில்,

அனுபவம் தான் எல்லாவற்றிற்கும் அடித்தளமாய் அமையும்.

  நானும் படித்து முடித்த பின்பு வேலை தேடி சென்றபோது சந்தித்த  பிரச்சனைகளும் சந்தித்த மனிதர்களும்தான்  என்னுள் இந்த தாக்கத்தை ஏற்படுத்தினர்.


ஒவ்வொரு முறையும்  சந்திக்கும்  ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருப்பதை உணர்ந்தேன்.
 ஒவ்வொரு நிறுவனத்திலும் பல்வேறு  தேவைகளும் பிரச்சினைகளும் இருப்பதை உணர்ந்த போது நாம் அவர்களுக்கு ஏன் உதவும் வகையில் நம்முடைய வேலையை மாற்றிக் கொள்ளக்கூடாது  என்று தோன்றிய எண்ணத்தின் பலனாய் இன்றைக்கு எனக்கு  ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது இந்நிறுவனம்தான்.

வேலை வாய்ப்புகள் இருக்கின்றது வேலை  தேடுபவர்களுக்கும் இருக்கின்றனர்.  இவர்களுக்கு ஒரு பாலமாக   செயல்படுவதே இந்த நிறுவனத்தின் பணி.


 பணி கிடைப்பது மிக எளிதாகவும் ஒரு நம்பிக்கை வாய்ந்த ஒருவர் மூலம் செல்லும் பொழுது அவர்களுக்கும் நம்பகத்தன்மையும் ஏற்படுகிறது என்றார்.


பல நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு இருக்கின்றது.
வாய்ப்புத்தேடி அலைபவர்களும் 
 இருக்கின்றனர்.
அவர்களுக்கு உதவும் ஒரு சிறந்த நிறுவனமாக Vertexcartel 
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்நிறுவனத்தில் வேலை தேடுபவர்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் வசூலிப்பது இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUusடெலிகிராம் மூலமும் அறிய...https://t.me/trichyvisionn