Site Logo mobile
Search Icon
Mobile Gif
Startups

லிசியஸ் நிறுவனம் இப்போது திருச்சியிலும்!- இறைச்சி பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

 சுவையான, சத்தான இறைச்சியைச் சாப்பிட விரும்பும் இறைச்சி பிரியறார்களா நீங்கள்.அப்படியானால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவு விற்பனை செய்யும் லிசியஸ் நிறுவனம் திருச்சியில் தனது செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. உணவுப் பொருள்களை பாதுகாத்து வைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுவையான, புத்தம் புதிய இறைச்சி, மீன், கடல் உணவுகள், முட்டைகள், உடனடியாகச் சமைத்து சாப்பிடும் வகையிலான இறைச்சி வகைகள், இறால், முட்டை தொடர்பான உணவு வகைகள் என நாவுக்கு விருந்து படைக்கும் பல அம்சங்கள் லிசியஸில் உள்ளன.

பல்வேறு வகையான இறைச்சிகள், புத்தம்புதிய மீன் வகைகள், கடல் உணவுப் பொருள்கள், முட்டைகள், கபாப்கள், தந்தூரிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் வழங்கி வருகிறது. லிசியஸ்,

இந்தியாவில் புத்தம் புதிய இறைச்சி மற்றும் கடல் உணவு பிராண்டுக்கென எப்எஸ்எஸ்சி 22000 சான்றிதழைப் பெற்றுள்ளது லிசியஸ், உணவுப் பாதுகாப்புக்கென உயர்நிலை அதிகார அமைப்பு வழங்கும் இந்தச் சான்றினை லிசியஸ் பெற்று இருக்கிறது. லிசியஸின் அனைத்துப் பொருள்களிலும் 150-க்கும் மேற்பட்ட தர பரிசோதனை செய்யப்படுகின்றன. இதன் பிறகே உணவுப் பொருள்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.

லிசியஸின் தயாரிப்புகள் எதுவும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பதப்படுத்தப்படுவது இல்லை. புத்தம் புதியதாகவே இருக்கும். லிசியஸின் பொருள்கள் அனைத்தின் வெப்ப நிலையையும் பரிசோதிக்க செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்படுகிறது. இறைச்சிகளை புத்தம் புதிதாக வைத்திருக்க அதனை ஜீரோ முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலேயே வைக்க வேண்டும். வீடுகளுக்கு இறைச்சிகளை விநியோகிக்கும் வரை அதனுடைய தரம் உள்ளிட்ட அம்சங்களுக்கு லிசியஸ் பொறுப்பேற்றுக் கொள்கிறது. சிக்கன் மற்றும் மீன் போன்றவை இயற்கை முறையில் வளர்க்கப்படும் பண்ணைகள், குட்டைகளில் இருந்து பெறப்படுகின்றன. இறைச்சிகள் அனைத்தும் அரசு அங்கீகரித்துள்ள பங்குதாரர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. செயற்கை சாயங்கள், ஊசிகள், நிறமிகள் ஏதும் சேர்க்கப்படாமல் புத்தம் புதிதாக இறைச்சிகள், கடல் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

 இறைச்சி, உடல் உணவுப் பொருள்களை வெட்டி சுத்தப்படுத்தத் தருவதற்கு நன்கு திறன் படைத்த நபர்களை லிசியஸ் கொண்டிருக்கிறது. இதன்மூலம், சமையல் அறைகளில் இல்லத்தரசிகளுக்கு நேரம் மிச்சப்படும்.

லிசியஸ் உணவுப் பட்டியல்

கோழி கோழிக் கறி, கோழி நெஞ்சுப்பகுதி, முழுமையான கறிக்கோழி கோழி கால்பகுதி, சிக்கன் லாலிபாப், சிக்கன் டிரம்ஸ்டிக், சிக்கன் மின்சி,

ஆட்டுக்கறி ஆட்டுக்கறி கீமா, லாம்ப் கீமா, ஆட்டுக் கறி, லீன் ஆட்டுக்கறி, பிரியாணி செய்வதற்கான ஆட்டுக்கறி, ஈரல், ஆட்டுக்கறி சூப்.

மீன் – கடல் உணவு: தேங்காய் பாறை, இறால், கட்லா, கனவா, கடமா, கொடுவா உள்ளிட்ட பல்வேறு மீன்வகைகள்.

முட்டைகள்: வெள்ளை கரு முட்டை, நாட்டுக் கோழி, பிரவுன் ஓட்டு முட்டை காடை முட்டை வாத்து முட்டை

உடனடியாகச் சாப்பிடலாம்: சிக்கன் கட்லெட், சிக்கன் விங்ஸ், பஞ்சாபி தந்தூரி சிக்கன் முதல் ஹைதராபாத் மட்டன் கபாப், ப்ரான் ஷப்ரானி, நீலகிரி பிஷ் டிக்கா, அம்ரித்சரி பிஷ் ப்ரை போன்ற பல்வேறு வகை உணவுகளை உடனடியாகப் பெற்று சமைத்துச் சாப்பிடலாம். வார இறுதி நாள்களில் வீட்டில் பார்ட்டி கொண்டாட நினைத்தால் சண்டே சிக்கன் ரோஸ்ட் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.

கோல்ட் கட்ஸ்: பெப்ரி சிக்கன் சலாமி, சிக்கன், பிரேக்பாஸ்ட் சிக்கன், சிக்கன் லோப்,சிக்கன் யோனர்,

ஸ்பெர்ட்ஸ். இறைச்சி மற்றும் முட்டை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்பர்ட்ஸ் வகை உணவு. இதில் செயற்கை நிறமிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை.உடனடியாகச் சாப்பிடக் கூடிய உணவுப் பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

 கபாப்களை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இந்தியாவில் பிரபலமான கபாப்களை வீட்டில் இருந்தபடியே செய்து சாப்பிடலாம். ஹைதராபாத் மட்டன் ஷமி கபாப், லக்னோ மட்டன் கபாப், புரானி தில்லி கி மட்டன் சீக் கபாப் போன்றவற்றை லிசியஸ் மூலமாகப் பெற்று சாப்பிடலாம். சாப்பிடும் முன்பு இரண்டு படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும் ஒன்று மசாலாவைத் தடவ வேண்டும். மற்றொன்று அனலில் வைக்க வேண்டும். இதன்பின்பு சாப்பிடலாம்.

 லிசியஸ் செயலினை (ஆப்) ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம் நீங்கள் விரும்பு நேரத்திலோ அல்லது 90 நிமிடங்களுக்குள்ளோ பொருள்கள் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்தடையும். முதல் முறையாக ஆர்டர் செய்கிறீர்கள் என்றால் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

1800-1490-786 என்ற இலவச தொலைபேசி என் மூலமும் https://www.licious.inஎன்ற இணையத்தளத்திலும் தொடர்புகொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *