கடந்த 31.01.2021-ந்தேதி மாலை 1100 மணிக்கு கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த எதிரி நீர்காத்தலிங்கம் 30/26 த.பெ.மாரிமுத்து என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு, கடந்த 02.04.2021- ந்தேதி மேற்படி எதிரி நீர்காத்தலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.
இன்று 06.01.2026- ந்தேதி மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி மாண்பமை அமர்வு நீதிபதி, மகிளா நீதிமன்றம் அவர்களால் எதிரி நீர்காத்தலிங்கம் என்பவருக்கு போக்சோ வழக்கின் கீழ் ஆயுள் தண்டனை
மற்றும் ரூ.2000/- அபராதமும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதமும் என இரட்டை ஆயுள் தண்டனையும், இ.த.ச 366-ன்படி 10 வருடம் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம், இ.த.ச பிரிவு 342-ன்படி ஒரு வருடம் தண்டனை மற்றும் ரூ.1000/- அபராதம் என இந்த அனைத்து சிறை தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணைக்கு சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர்படுத்தியும்,
இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments