தமிழர் நலன் காக்கும், தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் திராவிட இயக்க அரசியல் மரபை மீறாத ஆளுநர் உரையை வரவேற்கிறேன்.

நமது தனித்துவமான இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டின் மாநில உரிமை, மக்கள் நலன் ஆகியவற்றில் உறுதிப்பாடு, மாநில எதிர்காலம் காக்கப்பட “தேசியக் கல்விக்கொள்கை 2020”-ஐ எதிர்க்கும் திடமான குரல், வரலாற்றில் இல்லாத அளவிலான நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, கனிமவளங்களை முறைப்படுத்தி அரசின் வருவாயைப் இரட்டிப்பாக்கும் திட்டம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதிப் பாதைக்கான உள்ளடக்கம், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசை நட்புணர்வுடன் அணுகும் முறை என இன்றைய ஆளுநர் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
18.06.2026

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments