திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் 5 கிராமங்களில் குளம் தூர்வாரும் பணி!

திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் 5 கிராமங்களில் குளம் தூர்வாரும் பணி!

This image has an empty alt attribute; its file name is IMG-20200929-WA0006-300x142.jpg
Write caption…

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5 கிராமங்களில் குளம் தூர்வாரும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது.

This image has an empty alt attribute; its file name is IMG-20200929-WA0010-300x138.jpg

திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூக பணி மையத்தின் திட்ட பணிகளோடு இணைந்து "மோனஸ் யுனிதாஸ்" திட்டத்தின் கீழ் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களான கொட்டப்பட்டு, கோலார்பட்டி, குருநாதன்பட்டி, நாசரேத், மற்றும் குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. மேலும் நாசரேத்திலிருந்து பிடாரம்பட்டி வரை நீர்வரத்து வடிகால் சுத்தம் செய்யப்பட்டது.

Advertisement

இத்திட்டத்தின்கீழ் ஊர் பொதுமக்கள், திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூக பணி மையத்தோடு ஒன்றிணைந்து கடந்த ஒரு மாத காலமாக தங்களுடைய பகுதிகளை தூர்வார உதவி செய்துள்ளனர். நிகழ்ச்சியின் திட்ட இயக்குனராக TMS அருட்பணி ஜான் செல்வராஜ் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டஸ் ஆகியோர் இப்பணிகளை கண்காணித்தனர்.

Image
This image has an empty alt attribute; its file name is IMG-20200929-WA0008-300x225.jpg