துறையூர் அருகே கீரம்பூர், காந்திநகர் காலணியில் கடந்த சில மாதமாக குடிநீர் பிரச்சனை ஏற்படுவதாக கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது,
போலீசார் பேச்சுவார்த்தை பிறகு போராட்டம் கைவிடப்பட்டது,
போக்குவரத்து பாதிப்பு..
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காந்திநகர் காலணியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்த்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது,
கீரம்பூர் ஊராட்சிக்குட்பட்ட காலணியில் சுமார் 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், கடந்த சில மாதமாக குடிநீர் வழங்கப்படாததால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காதது கண்டித்து குடிநீர் வழங்க வலியுறுத்தும் வகையில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது,
இதன் காரணமாக துறையூர்–பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விடுமுறை தினம் முடிந்து வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் பணிக்குச் செல்லும் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள்,
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த துறையூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர், பின்னர் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்,
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments