சிறுவர் சிறுமியருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்!!

சிறுவர் சிறுமியருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர்!!

திருச்சி பொன்மலை காவல்நிலைய ஆய்வாளராக இருப்பவர் சகாய அன்பரசு.

இவர் நேற்று மாலை வேளையில் பொன்மலைப்பட்டி புதுபாலம் காந்தி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளை அழைத்து கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு புரியும் படி எளிய நடையில் அழகாக அவர்களிடம் பேசியுள்ளார்.  

பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுவர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளை வழங்கினார்.

Advertisement

சிறுவர் சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பொன்மலை காவல்நிலைய ஆய்வாளரின் இந்த செயல் அங்கிருந்த பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மீதும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.