திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை

போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்ற வருகிறது.சோதனையின் போது வெளி ஆட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டால் அது குறித்து விசாரிக்கப்படும். விசாரணை முடிவில் லஞ்ச பணம் என்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments