டெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE இளைஞர்கள்!!

டெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE இளைஞர்கள்!!

படித்தால் மட்டும் வேலை கிடைத்து விடுமா? ஆனால் அதையும் தாண்டி பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் இக்கால இளைஞர்கள். குடும்பம் ஒருபுறமும் தன்னுடைய வாழ்க்கை பயணம் மறுபுறமும் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் கார்ப்பரேட்டுகளின் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக காலம் கழிக்கும் இளைஞர்களாக இப்போது மாறி வருகின்றனர். ஆனால் சற்று வித்தியாசமாக கடந்த ஆண்டு மே மாதம் ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்கு பதிலாக நாமலே சேர்ந்து டெலிவரி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கினால் என்ன என்பதை நினைத்து திருச்சி இளைஞர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த THE FOODIEE நிறுவனம்!

Advertisement

ஓராண்டு கால பயணத்தையும் திருச்சி மக்களின் வரவேற்பையும் விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு.

முதலில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமாக ஆரம்பித்து தற்போது திருச்சி மக்களுக்காக வீட்டு உபயோக பொருட்கள், காய்கறிகள், வாடிக்கையாளர்கள் சொல்லும் இடங்களிலுக்கு சென்று பொருள்களை வாங்கி வருதல், பயணிகளை ஏற்றி விடுதல் என பல்வேறு வகையில் மாறுதல்களைப் பெற்று மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். இதன் மூலம் திருச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்று வந்துள்ளனர். ஆன்லைன் மூலம் திருச்சி மக்களை ஒன்றிணைத்து பல்வேறு வகையான செயல்பாடுகளை இந்த FOODIEE நிறுவனம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே வருகின்றனர். 

இதுகுறித்து இந்த FOODIEE நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜந்தத்திடம் பேசினோம்... "எங்களுடைய THE FOODIEE APP திருச்சி மக்களால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துள்ளனர். இளைஞர்கள் நாங்கள் முதற்கட்டமாக ஒன்றிணைந்து ஏதோ ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வேலை செய்வதை விட நம்ம ஊர் மக்களுக்காக நாமே ஒன்றிணைந்து செய்தால் என நினைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த FOODIEE நிறுவனம். எந்த ஒரு முன் அனுபவமுமின்றி இளைஞர்கள் நாங்கள் ஒன்றிணைந்து இந்த ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனத்தை தொடங்கினோம். முழுநேர உழைப்பின் மூலம் குறைந்த கட்டணத்தில் திருச்சி மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றோம்.

Advertisement

 இரவு 12 மணிக்கு பர்த்டே கேக் வேண்டுமென்றாலும் டெலிவரி செய்யவும், வாடிக்கையாளர்கள் சொல்லும் இடத்தில் சென்று பொருள்களை வாங்கி வருதலும் என பல்வேறு கட்ட பணிகளை இன்றளவும் செய்து வருகின்றோம்" என்றார் அஜந்தன்

THE FOODIE நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜந்தன்

உள்ளூர் மக்களுக்காக வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், திருச்சி மக்களுக்காக தனித்துவமாய் உருவாக்கப்பட்ட இந்த ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனத்தின் இளைஞர்கள் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். பெயர் தெரியாத ஏதோ பல கார்ப்பரேட் டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உதவும் நாம், நம்ம ஊர் இளைஞர்கள் முன்னெடுக்கும் இந்த FOODIEE நிறுவனத்திற்கு ஆதரவு அளித்தால் இன்னும் பல இளைஞர்கள் புது உற்சாகத்தோடு பயணிக்க ஆரம்பிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY