Site Logo mobile
Search Icon
Mobile Gif
Startups

திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலையம் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மணிகண்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு உதவிடும்
வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மணிகண்டத்தில் சேர்க்கை உதவி மையம் 
அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட திறன் பயிற்சி மையம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருச்சி ஆகிய இடங்களிலும் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். பொருத்துநர், மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கம்பியாள் மற்றும் பற்றவைப்பவர் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு 
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரையிலும், பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் பயிற்சி கட்டணம் கிடையாது, பயிற்சியின் போது மாதம் தோறும் ரூ.750 – உதவித்தொகை வழங்கப்படும், மற்றும் விலையில்லா மடிக்கணணி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், பாடபுத்தகங்கள், 
வரைபட கருவிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். விண்ணப்பத்திற்கான கட்டணம் தொகையாக ரூ.50 விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்க மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், முன்னுரிமைச்சான்று, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல் ஆகியவை தேவையான ஆவணங்கலாகும். விண்ணப்பம் செய்யவதற்கான கடைசி நாள் : 28-07-2021. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்களை கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை தொடர்பாக முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், மணிகண்டம், திருச்சி-12 நேரிலோ அல்லது 0431-2906062 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *