Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ரயில்வே 12-வது யோகா தினம் கொண்டாட்டம்

திருச்சிராப்பள்ளி கோட்டம், தென்னக ரயில்வே 12-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் 2014 டிசம்பரில் அறிவிக்கப்பட்ட சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. யோகா பயிற்சியின் பல நன்மைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.இதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி கோட்டம் 12-வது சர்வதேச யோகா தினத்தை ஜூன் 21, 2026 அன்று சிறப்பாக கொண்டாடியது. காலை வேளையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு இடங்களில் கூட்டு யோகா பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சிராப்பள்ளியில்:

“Yoga for Healthy Ageing” என்ற கருப்பொருளில், பல மண்டல பயிற்சி நிறுவனத்தில் கோட்ட ரயில்வே மேலாளர் திரு. பாலக் ராம் நேகி தலைமையில் யோகா அமர்வு நடத்தப்பட்டது. மூத்த கோட்ட பணியாளர் அதிகாரி திருமதி. சரண்யா. வி.டி. வழிகாட்டுதலில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு. கே.எம். சத்யா ரத்தன், கிளை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உற்சாகமாக பங்கேற்றனர்.

ரயில் மஹால், ரயில் கல்யாண மண்டபம் மற்றும் ஆங்கிலோ-இந்திய பள்ளியிலும் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான யோகா அமர்வுகள் நடைபெற்றன. திருச்சியின் “ஆர்ட் ஆஃப் லிவிங் பவுண்டேஷன்” நிபுணர்கள் ஒரு மணி நேர யோகா ஆசனங்கள் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை வழிநடத்தினர்.

விருத்தாசலம், சிதம்பரம், கும்பகோணம், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், லால்குடி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கோட்டத்தின் 13 இடங்களிலும் இதேபோன்ற யோகா பயிற்சிகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

ஊழியர்களின் நலனை மேம்படுத்தி பயணிகளுக்கான சேவைத் தரத்தை உயர்தும் நோக்கில், யோகா உள்ளிட்ட நலவாழ்வு திட்டங்களை திருச்சிராப்பள்ளி கோட்டம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *