முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி ரத்ததானம் வழங்கி தொடங்கிவைத்த அமைச்சர் ரமேஷ்.

நாளைய தினம் பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காவேரி மருத்துவமனை அலுவலக கட்டிடத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பங்கேற்று ரத்ததான முகாமினை தொடங்கி வைத்ததுடன், முதலமைச்சருக்காக தானும் ரத்ததானம் செய்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஆர்.கே ராஜா உள்ளிட்ட ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் வழங்கி வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டுவதை தவிர்த்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தவெகவினர் செய்து வருகின்றனர் அந்த வகையில், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தானத்தில் சிறந்த தானமான ரத்ததானத்தை தற்போது திருச்சியில் உள்ள அவரது தொண்டர்கள் வழங்குவதாகவும், திருச்சி மாவட்ட மக்களின் சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments