Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர் MLA அலுவலகத்திற்கு TVK கொடி நிற பெயிண்ட்: பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு!

திருவெறும்பூர் தொகுதி அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கட்சித் கொடி நிறம் போன்ற வர்ணம் பூசப்பட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையையும், தொகுதி மக்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நவல்பட்டு விஜி. இவர் இதற்கு முன்பு, “அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைகளை ஆயிரம் அடி பள்ளத்தில் கொட்டலாம்” என்று கூறி சமூக வலைதளங்களில் ‘வில்லேஜ் விஞ்ஞானி’ என்ற விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கான அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகம் போல மாற்றி, அதற்கு TVK கட்சியின் கொடி வண்ணத்தைத் தீட்டியுள்ளார். அரசு அலுவலகத்தைப்

பொதுவானதாக நடத்தாமல், கட்சி அலுவலகம் போல மாற்றிய சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயல் திருவெறும்பூர் பகுதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *