Site Logo mobile
Search Icon
Mobile Gif
Startups

தீபாவளிக்கு அதிக டிமாண்டில் இருக்கும் வீட்டு முறை பலகாரங்கள் – ருசிக்க தூண்டும் வைபவம் புட்ஸ்

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு எப்படியோ அதேபோல்  பண்டிகை காலங்களில் பலகாரங்களுக்கு ரொம்ப பெரிய இடம் உண்டு.

  இன்றைய காலகட்டத்தில் அதை எல்லாத்தையும் வீட்டிலேயே எல்லாராலும் செய்ய முடியுமா அப்படின்னு பார்த்தா முடியாது. பலரும் கடைகளில் தான் வாங்குவார்கள்.

 அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டுமுறை சுவையிலேயே கிடைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்னு ஸ்ரீரங்கம் சாத்தாராவீதியில் வைபவம் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்துவருகிறார்கள் ஜனனி தம்பதியினர்.

“உணவு ரொம்ப பிடிக்கும் அது ஆரோக்கியமாக சாப்பிட்டால் இன்னும் பிடிக்கும். அதுலயும் பலகாரங்களில் கூட ஆரோக்கியமா பாரம்பரிய முறையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும் தானே! அது ஏன் நாமே பண்ண கூடாதுனு யோசிச்சு பெங்களூரில் பார்த்துட்டு இருந்த ஐடி வேலையை விட்டுட்டு இப்போ இதை தொடங்கி பத்து மாசம் ஆகுது “என்றார் ஜனனி.

மேலும், “பாரம்பரிய பலகாரங்களில் ரொம்ப கவனமா வீட்டுத்தயாரிப்பு எப்படி இருக்குமோ அதே முறையை பயன்படுத்தி வெண்ணெய் சேர்த்து தயார்செய்வதால் அதன் ருசி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது..

 தேன் குழல், வெங்காய முறுக்கு,கைமுறுக்கு,கார தட்டை,எள்ளு தட்டை, லட்டு,அதிரசம், பால்கோவா, பொட்டுக்கடலை உருண்டை,பாசிப்பயறு உருண்டை, கோதுமை லட்டு என இப்படி எல்லாமே பாரம்பரியமான வகைகளையே தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம் .குழந்தைகளும் பெரியவர்களும் இது அதிகம் விரும்பி உண்பது தான் எங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்ததுு” ,என்றார்.

உணவு வகைகளும் பலகாரங்களுடன் நின்றுவிடாமல் மக்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்த பாரம்பரிய அரிசி வகைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனையும் விற்பனை செய்து வருகின்றனர் இவர்கள்.பாரம்பரிய அரிசி வகைகள் எவ்வாறெல்லாம் நம் உணவில் பயன்படுத்தலாம் என்பது குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி வருகின்றனர். 

குழந்தைகளும் முதியவர்களும் தான் இவர்களின் ரசிகர் பட்டாளம். அவர்களுக்கு சரியான வகையில் ஆரோக்கியமான ஒன்றை வழங்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் புதுமையான முறையில் அதேசமயம் சிறந்த முறையில் கொடுக்கவேண்டும் என்று தங்கள் பயணத்தை தொடங்கியிருக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *