இந்திரா கணேசன் அறக்கட்டளையின் முன்-தொழில்முனைவு மையம் (Pre-Incubation Centre), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு (StartupTN) இணைந்து “Additive Manufacturing & FDM 3D Printing Techniques” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி IGRID ஆய்வகத்தில் நடத்தினர்.

நிகழ்ச்சி, கல்வி நிறுவனங்களின் செயலாளர் எர். ஜி. ராஜசேகரன் அவர்களின் வழிகாட்டுதலிலும், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் பதிவாளர் மற்றும் இந்திரா கணேசன் அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் மு. அனுசுயா ஆகியோரின் தலைமையிலும் நடைபெற்றது.
HowNWhy நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தொழில்நுட்பத் தலைவர் கே. டி. ஜெபர்சன் ஜெஃப்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, Additive Manufacturing மற்றும் FDM 3D Printing தொழில்நுட்பங்களின் செயல்முறை, பயன்பாடுகள், தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து விளக்கினார். மருத்துவம், உயிரி மருத்துவம், விண்வெளி, வாகன உற்பத்தி, தயாரிப்பு முன்மாதிரி உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் 3டி அச்சிடும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 3டி அச்சிடப்பட்ட மாதிரிகளின் நேரடி செயல்விளக்கமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாரணாதன் பொறியியல் கல்லூரி, கேர் பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி (ஸ்ரீரங்கம்) ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 36 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
நிகழ்ச்சியை டாக்டர் ஆர். பரத் குமார் ஒருங்கிணைக்க, டாக்டர் எம். ஜோசப் சாலேத்ராஜ் மற்றும் த. பவித்ரா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் கேள்வி–பதில் அமர்வு மாணவர்களிடையே பெரும் வரவேற்பு

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments