திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொது துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர பணியாளர்களாகும் நூற்றுக்கணக்கான ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கிப்பட்டி ராயமுண்டான் பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சார்லஸ் (55) என்பவர் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக 30 ஆண்டுகள் வேலை பார்த்து வந்ததாகவும் இந்த நிலையில் ஸ்டோர் உதவியாளராக தற்பொழுது வேலை பார்த்து வந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே சக ஊழியர்கள் சார்லசை பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சார்லஸ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இறந்த சார்லஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்க வேண்டும். என்பதை வலியுறுத்தி பெல் மருத்துவமனை முன்பு சுமார் 100 பேர் திரண்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெல் எஸ் எஸ் டி பி பொது மேலாளர் சஞ்சீவி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பெல் மருத்துவமனை முன்பு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments